தமிழகம்

ஆதார் எண் பதிவுக்கு 3 மாதம் அவகாசம்

செய்திப்பிரிவு

விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சமையல் சிலிண்டருக்கான மானியத்தை வங்கியில் பெறுவதற்கு ஆதார் எண்ணை பதிவு செய்ய மார்ச் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாதவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் மானியம் கிடைக்காது.

மத்திய அரசிடமிருந்து சிலிண்டருக்காக கிடைக் கும் மானியம் பல்வேறு மாவட்டங்களில் வங்கிகளில் போடப்பட்டு வருகிறது. அதை வைத்து, சந்தை விலை யில் சிலிண்டர்களை விநியோகஸ்தர்களிடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

இத்திட்டம் இது வரை இந்தியாவில் 184 மாவட்டங்களில் அமலில் உள்ளது. சிலிண்டருக்கான மானியம் பெறும் 14 கோடி பேரில் 6.57 கோடி பேருக்கு இத்திட்டத்தின் கீழ் மானி யம் வங்கியில் போடப்படுகிறது. இது மேலும் 105 மாவட்டங்களில் அமல்படுத்தப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங் களும் அடங்கும். இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆதார் எண்ணை வங்கியில் பதிவு செய்ய மார்ச் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங் களில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் இறுதி வரை ஆதார் எண்ணை பதிவு செய்ய அவகாசம் தரப்பட்டுள்ளது.

ஆதார் எண் அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் நிர்பந்திப்பது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

SCROLL FOR NEXT