தமிழகம்

புத்தாண்டு ஷாப்பிங் ஃபெஸ்டிவல்: டிரேட் சென்டரில் இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

வீட்டு உபயோகப் பொருட்களை மாபெரும் தள்ளுபடி விலையில் வாங்க வசதியாக 3 நாள் கண் காட்சி சென்னை டிரேட் சென்டரில் இன்று தொடங்குகிறது. சென்னை பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் நிறுவனம் இக்கண்காட்சியை நடத்துகிறது. காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.

சென்னையில் சமீபத்தில் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தள்ளுபடி விலையில் வாங்க ஏதுவாக புகழ்பெற்ற நிறுவனங்களின் 300-க்கும் மேற்பட்ட ஃபர்னிச்சர்கள் விற்ப னைக்கு கிடைக்கும். குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி செய்ய பஜாஜ் ஃபைனான்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கை யாளர்கள் முன்பணம் ஏதுமின்றி இங்கு பொருட்களை வாங்கிச் செல்லலாம். மேலும் சமையலறை சாதனங்கள், வீட்டு உள் அலங்காரப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், புதிய ரக ஆடைகள், பாரம்பரிய ஆடை கள், ஸ்மார்ட் ஹோம் கருவி கள், குடிநீர் சுத்திகரிப்பு சாதனங் கள் என 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் 150-க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

SCROLL FOR NEXT