தமிழகம்

ஆசனூர் சோதனைச் சாவடியில் கர்நாடக அரசுப் பேருந்தில் வந்த 3 பயணிகளிடம் 175 பவுன் பறிமுதல்: கோவை நகைக் கடை கொள்ளை வழக்கில் தொடர்பு

செய்திப்பிரிவு

மைசூரில் இருந்து கோவை வந்த கர்நாடக அரசுப் பேருந்து பயணிகளிடம் இருந்து 175 பவுன் நகையை ஆசனூர் சோதனைச் சாவடி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங் கலத்தை அடுத்த ஆசனூரில் மது விலக்கு போலீஸாரின் சோதனைச் சாவடி உள்ளது. தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள இந்த சோதனைச் சாவடியில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை மைசூருவில் இருந்து கோவை நோக்கி வந்த கர்நாடக அரசுப் பேருந்தில் உள்ள பயணிகளிடம் மதுவிலக்குப் போலீஸார் சோதனை நடத்தினர். 3 பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டபோது, அவர்கள் தங்க நகைகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

அவர்களை ஆசனூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். இதில், அவர்கள் 175 பவுன் நகைகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

அவர்கள், கோவை கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த விஜய குமார்(24), ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த அசாருதீன்(25), தூதி மடையைச் சேர்ந்த ரியாசுதீன்(25) என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ராஜ வீதியில் உள்ள சித்திக் என் பவருக்குச் சொந்தமான நகைக் கடையில் நான்கரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்ப வத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.

திருட்டு நகைகளை விற்பனை செய்வதற்காக மைசூரு கொண்டு சென்றதாகவும், அங்கு விற்க முடியாததால், திருப்பி எடுத்து வந்ததாகவும் பிடிபட்டவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். நகை கொள்ளை தொடர்பான வழக்கு கோவை போலீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், 175 பவுன் நகை மற்றும் பிடிபட்ட மூவரும் கோவை போலீ ஸாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

SCROLL FOR NEXT