தமிழகம்

ரசாயன உரப் பயன்பாடு தவிர்க்க முடியாதது: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

ஆர்.டி.சிவசங்கர்

உணவுப் பாதுகாப்பை நிறைவேற்ற நிலப் பயன்பாட்டை அரசு வரையறுக்க வேண்டுமென, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.

குன்னூர் வெலிங்டனிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தை, அதன் தலைவர் விஞ்ஞானி சிவசாமியுடன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர், ‘தி இந்து’ செய்தியாளருக்கு அளித்த பேட்டி:

பி.டி. காய்கறிகளால் உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகளிடையே இருப்பதால் இதை எதிர்க்கின்றனர். எனவே பி.டி. விதைகளை அறிமுகப்படுத்தும் போது மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். இதை கண் காணிக்க குழு அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு உரிய விலை, மகசூல் கிடைத்தால், புதிய பயிர்களுக்கு ஆதரவு அளிப் பார்கள்.

கோதுமை விவசாயம்

இந்தியாவில் ஆண்டுதோறும் 260 மில்லியன் டன் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதே அளவுக்கு காய்கறி, பழங்களும், பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டதால் ஆண்டுதோறும் மில்லி யன் டன் கோதுமை, 200 மில்லியன் டன் அரிசி தேவைப்படுகிறது.

தென்னிந்தியாவில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுவரும் கோதுமை, அடுத்த 20 ஆண்டுகளில் 50 ஆயிரம் ஏக்கராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 மாவட்டங்களிலும், கர்நாடகத்தில் 6 மாவட்டங்களிலும் கோதுமை விவசாயம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.

ரசாயன உர பயன்பாடு

மக்கள்தொகை பெருகி வருவதால், விவசாய நிலம் குறைந்து வருகிறது. எனவே இருக்கும் நிலத்தில் மகசூலை அதிகரிக்கும் பயிர்களை உருவாக்க வேண்டியதுடன், நிலப் பயன்பாட்டை அரசு வரையறுக்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன், பயிர்களுக்கு உரிய விலை, நாடு முழுவதும் சந்தைப்படுத்தும் முறை ஆகியவற்றை அரசு அமல்படுத்த வேண்டும்.

பயிர்களுக்கு உரம் தான் முக்கி யம். அது இயற்கை உரமாகவோ, ரசாயன உரமாகவோ இருக்கலாம். இயற்கை வேளாண்மையில் மகசூல் குறைவு. அதேசமயம் பெருகும் மக்கள்தொகைக்கு உணவளிக்க ரசாயன உரப் பயன்பாட்டை தவிர்க்க முடியாது. இயற்கை வேளாண்மை மேற்கொள்ள தேவையான கால்நடைகள் இல்லை.

தண்ணீர், விவசாயத் தொழி லாளர்கள் பற்றாக்குறை அதிகரித் துள்ளதால், மழைநீர் சேகரிப்பை மேற்கொள்ள வேண்டும்; நீரை திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும். தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட இயந்திரமயம்தான் தீர்வு. மலைப் பகுதிகளிலுள்ள நிலப்பரப்பை கருத்தில்கொண்டு, உரிய இயந்திரங்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT