தமிழகம்

ஜெயலலிதா இன்று நாகர்கோவிலில் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில் பொருள்காட்சித் திடலில், ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்த புரம் வரும் முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலி காப்டரில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப் பட்டுள்ள ஹெலிபேடுக்கு வருகிறார்.

பின்னர் கார் மூலம் பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். மாலை 3.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா பேச தொடங்குகிறார். பொதுக்கூட்டம் முடிந்து மீண்டும் திருவனந்தபுரம் வழியே சென்னை செல்கிறார்.

அவரது வருகையையொட்டி தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த 8 கம்பெனி போலீஸார் நாகர்கோவிலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தென் மாவட்டங்களில் இருந்து 1,500-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

SCROLL FOR NEXT