ஊழல் பற்றி பேசுவதற்கு ஸ்டாலி னுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆர்.கே.நகர் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தலிலும் திமுகவுக்கு படு தோல்விதான் என்று முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஜெயல லிதா மர்ம மரணம் குறித்து விசா ரணை கமிஷன் மூலம் உரிய விடை தெரியும் வரை எங்களின் தர்மயுத் தம் தொடரும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை யாக ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த உத்தரவிடப்படும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, அரசியல் லாபத்துக்காக மு.க.ஸ்டாலின் பேசு வதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்தத் தேர்தல் மட்டுமல்ல, எந்தத் தேர்தல் ஆனாலும் திமுக படுதோல்வி அடையும். மக்கள் மத்தியில் அந்தக் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்ற சூழல் உருவாகி ரொம்ப காலம் ஆகிவிட்டது.
முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து என்னை பிரித்துவிட வேண் டும் என்ற எண்ணத்தில் அந்த (சசிகலா) குடும்பத்தினர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் எனக்கு செய்த கெடுதல்கள், அவமானங்கள் பற்றி 10 சதவீதம்தான் கூறியுள்ளேன். மீதியை என்னுள்ளே புதைத்துவிட் டேன் என்றுதான் சொன்னேன்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து திரட்டப்படும் என்பதற் கான பதிலை அவர் சொல்ல வேண்டும். மக்களை ஏமாற்றி வாக்கு களை பெற்றுவிடலாம் என்று நோக் கில் நிறைவேற்ற முடியாத திட்டங் களை எல்லாம் அறிவித்து உள்ளனர். அதிமுக கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்ப ஆதிக்கத்தின்கீழ் போய்விடக் கூடாது என்ற கொள்கையை நாங் கள் கையில் எடுத்திருக்கிறோம். அதனால்தான் ஆர்.கே.நகர் தொகுதி யின் ஒட்டுமொத்த மக்களும் எங் களுக்கு மிகுந்த வரவேற்பு கொடுக் கின்றனர். அதைத்தான் ஸ்டாலினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடும் 61 வேட்பாளர்களும் எங்க ளுக்கு எதிரிதான். ஊழல் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்களின் ஊழலை எல்லாம் மறைத்துவிட்டு எங்களை கேள்வி கேட்கிறார். சேகர் ரெட்டிக்கு மணல் ஒப்பந்தம் கொடுத் தது ஓபிஎஸ்தான் என்கிறார். அரசு விதிமுறைப்படிதான் மணல் விற்கப் பட்டது. சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவ் வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ் மாநிலக் கட்சி நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன், நமது மக்கள் கட்சி நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலத் தலைவருமான மு.ராஜமாணிக்கம், எம்ஜிஆர் மனைவி ஜானகியின் தம்பி மகனும் நடிகருமான தீபன், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனுக்கு ஆதரவு தெரிவித் தனர்.