தமிழகம்

அமைச்சர் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு - எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண்ணையா அறிவிப்பு

செய்திப்பிரிவு

குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர் பாக மத்திய அமைச்சர்கள் குழு வுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், வரும் ஜூலை 11-ம் தேதி முதல் நடக்க இருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண் ணையா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந் துரைப்படி ஒட்டுமொத்தமாக 23.55 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்குவதற்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்தது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம், படிகள் உட்பட மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதி யிட்டு வழங்கப்பட இருப்பதாக அறிவித்தது.

ஆனால், அடிப்படை சம்பளம் ரூ.26 ஆயிரமாக உயர்த்தாதது, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, காலிப்பணியிடங்கள் நிரப்பாதது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கா ததை கண்டித்து எஸ்ஆர்எம்யு சார்பில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத் தப்பட்டன. இதற்கிடையே, டெல்லி யில் மத்திய அமைச்சர்கள் குழு வோடு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 11-ல் நடத்த இருந்த வேலைநிறுத்த போராட்டம் தற் காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண் ணையா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக் கான 7வது ஊதிய உயர்வில் எங்களது கோரிக்கை ஏற்கப் படவில்லை. எனவே, வரும் ஜூலை 11-ம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் தொடங்குவோம் என அறிவித்தோம். இதற்கிடையே, பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். பின்னர், அவரின் உத்தரவுப்படி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுரேஷ்பிரபு, மனோஜ் சின்ஹா ஆகியோர் அடங்கிய குழுவுடன் நேற்று முன்தினம் இரவு எங்களது போராட்ட குழு தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கமிட்டியின் பரிந்துரைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும், லோகோ பைலட் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தனியாக விவாதிக்கப்படும் என அமைச் சர்கள் உறுதியளித்துள்ளனர். 52 வகையான படிகள் ரத்து செய்வதை நிறுத்தி மறுபரிசீலனை செய்ய கமிட்டி அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் முன் னேற்றம் ஏற்பட்டுள்ளதால், வரும் 11-ம் தேதி முதல் நடக்க இருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT