தமிழகம்

சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் சிக்கினர்

செய்திப்பிரிவு

சென்னை, மடிப்பாக்கத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மடிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. செயின் பறிப்பு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது.

தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் ஏற்கெனவே பல குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட ரவி, செல்வம் ஆகியோர் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது தெரிந்தது.

ஆதம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே செயின் பறிக்க காத்திருந்த ராஜா, செல்வம் ஆகியோரை மடிப்பாக்கம் போலீஸார் நேற்று மாலையில் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். 13 சவரன் திருட்டு நகைகளையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT