தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 98.8 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும் இருக்கும்.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் எந்த இடத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகவில்லை. அதிகபட்சமாக மதுரையில் 98.96 டிகிரி, திருச்சி மற்றும் தூத்துக்குடியில் 98.78 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தஞ்சாவூரில் 48 மி.மீ, அதிராம பட்டினத்தில் 34.8 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 33 மி.மீ, வால்பாறையில் 23 மி.மீ, கொடைக்கானலில் 14.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.