தமிழகம்

விதியின் விளையாட்டு: தற்கொலைக்கு முயன்ற இளைஞர் கீழே குதித்ததில் மூதாட்டி பரிதாப பலி

செய்திப்பிரிவு

சென்னையில் தற்கொலைக்கு முயன்றவர் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். தரையில் படுத்திருந்த மூதாட்டி மீது எதிர்பாராமல் அவர் விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.

சென்னை குமரன் நகர் நல்லா குப்பம் ஏ பிளாக் பகுதியில் வசிப்பவர் செல்வம்(36). ஆட்டோ ஓட்டுநர். மதுப் பழக்கத்துக்கு அடிமையான செல்வம், குடும்ப செலவுக்கு பணம் கொடுப்ப தில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 12.30 மணியள வில் மது குடித்து விட்டு போதை யில் வீட்டுக்கு வந்த செல்வம், மனைவியிடம் தகராறு செய்திருக் கிறார். இதில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் செல்வம், தற்கொலை செய்ய முடிவுச் செய்துள்ளார். தான் குடியிருந்த வீட்டின் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். அப்போது தரையில் படுத்திருந்த சாரதா (74) என்ற மூதாட்டி மீது செல்வம் விழுந்தார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் விரைந்து வந்து, இருவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிறிது நேரத்தில் சாரதா பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செல்வம் படுகாயம் அடைந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து குமரன்நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT