போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில், ஊதிய ஒப்பந் தம் தொடர்பாக சமீபத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்நிலையில், நேற்று போக்குவரத்து தொழி லாளர்களின் 10 சங்கங்களின் பிரதிநிதிகள், மீண்டும் போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து பேசினர்.
இது தொடர்பாக, தொமுச பொதுச்செயலாளர் நடராஜன் கூறியதாவது:
போக்குவரத்துத் தொழிலாளர் களிடம் இருந்து பிடித்தம் செய்யப் படும் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடைக்கான நிதி ரூ.5 ஆயிரத்து 200 கோடியை போக்கு வரத்துக் கழகங்கள் எடுத்து செலவழித்துள்ளன. இவை மூன்றுக்கும் சேர்த்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கரை 10 சங்கங்கள் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். அமைச் சரும், நிதியமைச்சர் மற்றும் முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், ஓய்வு பெற்ற போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தை விரைவாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
சந்திப்பு தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் கூறியதாவது:
மார்ச் 16-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் அரசு போக்குவரத்துக் கழகங் களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்காவிட்டால், வரும் 17-ம் தேதி அனைத்து சங்கங்களும் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.
பேருந்துகள் ஒரு நாளுக்கு ஒரு கோடி கி.மீ. ஓட வேண்டும். அதிலேயே ஒரு கி.மீ.க்கு 7 ரூபாய் பற்றாக்குறை ஏற்படுகிறது. 12 ஆயிரம் மாநகர பேருந்துகள் ஓடும் நிலையில், கழகங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. டீசல் விலை உயர்ந்தபோது, கூடுதல் தொகையை அரசு அளிக்கும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். ஒரு நாளைக்கு 20 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. இதற்கு ரூ.23 வீதம் ஒரு நாளைக்கு ரூ.4 கோடி போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு தரவேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ரூ.200 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கு அரசின் கொள்கைகள்தான் காரணம். ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,200 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. 30 லட்சம் மாணவர்கள் பயணிக்கும் போது அவர்களுக்காக ரூ. 1.500 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டும். மழை, வெள்ளத்தால் 4 நாட்கள் இலவச சேவைக்கு ரூ.12 கோடி தர வேண்டும். இது போன்ற தொகைகளை தந்தாலே சமாளிக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.