தமிழகம்

விவசாயத்தை பாதிக்காமல் மின்பாதை விவசாயிகள் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

செய்திப்பிரிவு

விவசாய நிலங்களை பாதிக்காமல் மாற்று பாதையில் மின்பாதை அமைக்க வேண்டும் என்று போராடி வரும் விவசாயிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து மின் தொடரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

சட்ட விதிமுறைகளையும் சூழலியல் தாக்க மதிப்பீட்டு முறைகளையும் பின்பாற்றாமல் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மேற்கொண்டுவரும் உயர்மின்கோபுரம், மின்பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும். விவசாய நிலங்களை பாதிக்காமல் மாற்று வழியில் மின்பாதை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்து கொள்கிறது'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT