ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய ஆளுங்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து சேலம் எஸ்.பி.-க்கும், வாழப்பாடி இன்ஸ்பெக்டருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தி.மு.க.
திமுக மாவட்ட கிளை செயலர் எஸ்.ஆர். சிவலிங்கம் சார்பில், வக்கீல் பரந்தாமன், சேலம் எஸ்.பி.-க்கும், வாழப்பாடி இன்ஸ்பெக்டருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அக்டோபர் 30-ஆம் தேதி கொடுக்கப்பட்ட புகாரின் மீது இதுவரை எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறும் ஆளுங்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகப்போவதாக வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.