எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி பொறியியல் கல் லூரி 14ஆம் பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா அண்மை யில் நடைபெற்றது.
விழாவுக்கு எஸ்.ஆர்.எம். பல் கலைக்கழக துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ தலைமை தாங் கினார். பதிவாளர் என்.சேதுராமன் முன்னிலை வகித்தார்.
யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் கூறுகையில், “உலகமய மாக்கலால் இந்தியாவுக்கு உலகச் சந்தையில் சிறந்த இடம் கிடைத்துள்ளது.
மற்ற நாடுகளுக்கு இந்தியா சிறந்த போட்டியாக விளங்கு கிறது. நுண்உயிரியல், உயிரி பொறியியல் துறைகளில் இந்தியா
சிறந்த பங்காற்ற வேண்டும். உலகமயமாக்கலுக்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் தகுதி களை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
விழாவில் 933 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங் கப்பட்டது. இளங்கலையில் 48 பேரும், முதுகலையில் 35 பேரும் பல்கலைக்கழக தரத்தையும், விருதையும் பெற்றனர்.