காவல்துறை மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கும் பணியில் தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் ஈடுபட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான டி.கே. ரங்கராஜன் கூறியுள்ளார்.
பண மதிப்பு நீக்கத்துக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து சென்னை அருகே மேடவாக்கத்தில் கடந்த 31-ம் தேதி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் போராட் டம் நடத்தினர். அதில் கலந்து கொண்ட இளம்பெண்கள் சிலரிடம் அநாகரிகமாகவும், அத்துமீறலா கவும் நடந்து கொண்ட பள்ளிக் கரணை போலீஸாரைக் கண் டித்து நேற்று முன்தினம் மேடவாக் கத்தில் பொதுக்கூட்டம் நடந் தது. கூட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் தீபா தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இந்த கூட்டத்தில் பேசியதாவது:
மத்திய அரசுக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தில் பெண்களை அடிப்பது, கேவலப்படுத்துவது, பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் களில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம்? கைது செய்தவர்களை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று மடிப்பாக்கம் உதவி ஆணையாளர் கோவிந்தராஜுவிடம் கேட்டேன். அவர் எனக்கு முறையான பதிலை சொல்லவில்லை.
காவல்துறையினருக்கு சட்டப் படி நீதிமன்றத்தில் அடி கொடுப் போம். மடிப்பாக்கம் உதவி ஆணையாளர் கோவிந்தராஜு, ஆய்வாளர் நடராஜ், உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் மீது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வரும் 11-ம் தேதி புகார் அளிக்கவிருக்கிறேன். அந்த மூன்று பேரும் அவர்கள் செய்த தவறுகளுக்கான தண்டனையை பெற்று சிறை செல்லத்தான் போகிறார்கள்.
நாடு இருக்கும் நிலைமை என்ன?, தஞ்சை தரணியே வறண்டு கிடக்கிறது. இதற்கு நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்துவது தவறா? காவல் துறையினரும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தானே. விவசாயி கள் பொங்கலை எப்படி கொண் டாடப்போகிறார்கள்? இதுபற்றி யெல்லாம் கவலைப்படக்கூடிய ஒரு இயக்கம் போராட்டம் நடத்துவதில் என்ன தவறு?
‘தி இந்து’வுக்கு நன்றி
ஜல்லிகட்டுக்காக மதுரை, ராம நாதபுரம் மக்கள் காத்திருக்கிறார் கள். ஜல்லிக்கட்டு 2 ஆயிரம் ஆண்டு களாக நடக்கும் கலாச்சார விளை யாட்டு. ஜல்லிக்கட்டு நடத்த அனு மதியளித்து இரண்டு நீதிபதிகளை நியமித்து முறையாக நடக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு நாடு முழுவதும் சிறு தொழில்கள் நலிந்து விட்டன. கட்டிட தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து போராடுவது தவறா? நாங்கள் நடத்தும் போராட்டம் அரசின் கொள்கைகளை எதிர்த்து நடக்கும் போராட்டம். போலீஸா ரின் அத்துமீறல்கள் பற்றி வெளி யான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து மனித உரிமை கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. ‘தி இந்து’வுக்கும், மனித உரிமைகள் ஆணையத்துக்கும் நன்றி.
பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் பஞ்சாப் டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியது. டி.ஜி.பிக்கே இந்த நிலை என்றால் மடிப்பாக்கம் உதவி ஆணையாளர், ஆய்வாளருக் கெல்லாம் என்ன கதி என்பது போகப் போகத் தெரியும். ஆய்வாளர் நடராஜ் 2013-ம் ஆண்டு ஏற்கெனவே ஒரு வழக்கறிஞரை துப்பாக்கியை காட்டி மிரட்டியவர். இப்படிப்பட்டவர்களை காவல் துறையில் வைத்திருந்தால் போலீஸுக்கு எப்படி நல்ல பெயர் வரும்?
உள்துறை செயலாளர், டிஜிபிக்கு அன்புடன் கோரிக்கை வைக்கிறேன். தயவு செய்து பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கை களால் களங்கப்பட்டிருக்கும் காவல்துறையை புனிதப்படுத் துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சமூக ஆர்வலரும் நடிகையுமான ரோகிணி, அனைந் திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் பி. சுகந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் எம். செந் தில், செயலாளர் எஸ். பாலா, வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஏ. பாக்கியம், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் வி. மாரியப்பன், செயலாளர் உச்சி மாகாளி, வாலிபர் சங்க தென் சென்னை மாவட்ட பொருளாளர் வசந்தி உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.