தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 24-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார். இதில், கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இதேபோல், வரும் 25-ம் தேதி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காலை 10 மணியளவில் தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட கழக செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் நான்கு நபர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரண்டு நபர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்து நபர்கள் என பதினான்கு நபர்கள் மட்டும் தவறாமல் வருகை தந்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
26-ம் தேதி காலை 10 மணியளவில் நடக்க உள்ள மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பதினான்கு பேர் கலந்து கொள்ள வேண்டும்.