பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் சென்னை திரும்பாததால், சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி குறித்துக் கேள்வி எழுந்துள்ள நிலையில், போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவும் ஆளுநரால் ஏற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கினர். இந்நிலையில் தமிழக ஆளுநர் இன்னும் சென்னை வராததால் சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து சசிகலா வசித்து வரும் போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.