ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புரோக்கர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.
ஆம்னி பஸ் நிலையத்துக்குள் டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் புரோக்கர்களே அதிக கட்டணத் துக்கு காரணம் என்று கூறப்படு கிறது. இதைத் தடுப்பதற்காக கோயம்பேடு போலீஸார் அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
உதவி ஆணையர் மோகன்ராஜ், ஆய்வாளர் ஹரிக்குமார் ஆகியோ ரது தலைமையில் 30 போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. யாராவது கூடுதல் கட்டணம் கேட்டால் அதுபற்றி அங்குள்ள புறக்காவல் நிலையத் திலும் பயணிகள் புகார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக ஆம்னி பஸ் நிலையத் தில் பஸ் கட்டணங்கள் அடங்கிய பேனர் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை டிராவல்ஸ் நிறுவன அலுவலகத்தில் மட்டுமே பயணிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், கூடுதல் கட்ட ணம் கொடுக்க வேண்டாம் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.