தமிழகம்

முதல்வரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம்

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே. ஞானதேசிகன் நேற்று இரவு பிறப்பித்த உத்தரவு: கூட்டுறவு சங்க பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரிய இணை இயக்குநர் ஜெ.கணேஷ் கண்ணா, முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வீட்டுவசதி வாரிய தலைவர்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (திருமயம்) பி.கே.வைரமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT