தமிழகம்

உங்க தொகுதி எப்படி இருக்கு? - திருவொற்றியூர்

செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர்

வென்றவர்: கே. குப்பன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 93944

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே.பி.பி. சாமி (திமுக)

பெற்ற வாக்குகள்: 66653

வட சென்னையின் முக்கியமான தொகுதிகளில் ஒன்று திருவொற்றியூர். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அ.இ.அதிமுகவின் கே. குப்பன். இதே தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றிய குப்பன் மக்கள் பிரச்னைகளை நன்கறிந்தவர். குடிநீர் விநியோகம் தொடர்பாக சமீபத்திய செயல்பாடுகள் மக்களுக்கு திருப்தியை தந்துள்ளது.

மீனவர்கள் அதிக அளவில் வசிக்கும் இப்பகுதியில் ரேஷன் பொருட்கள் விநியோகம், அரசு மருத்துவமனை, மின் விநியோகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் சிறப்பாக இருப்பதாகவும், அரசு அதிகாரிகளின் செயல்பாடு சரியாக இல்லை என கருதுகின்றனர். மேலும் குப்பை மற்றும் கழிவுநீர் மேலாண்மையும் மேம்படவேண்டும் என நினைக்கின்றனர்.

SCROLL FOR NEXT