ஓசூர் அருகே தனியார் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று ஓசூர் நோக்கி புறப்பட்டது. பேருந்தை கிருஷ் ணகிரியைச் சேர்ந்த ஓட்டுநர் சவுந்தர் ஓட்டிச் சென்றார். ராயக் கோட்டையைச் சேர்ந்த நடத்துநர் கிருஷ்ணன் உட்பட பேருந்தில் சுமார் 55 பயணிகள் இருந்தனர்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அடுத்த சுண்டகிரி என்னுமிடத்தில் பகல் 2.15 மணியளவில் பேருந்து சென்றபோது, எதிரில் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, திடீரென அங்கிருந்த வளைவுப்பாதையில் திரும்பியபோது தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இதில், தனியார் பேருந்தின் முன்பகுதி பயங்கரமாக நொறுங்கி யது. பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூளகிரி போலீஸார், படு காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட 30 பேரில், ஒரு பெண், ஒரு ஆண் வழியிலேயே உயிரிழந்தனர். மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 பேரில், 3 பேர் மேல் சிகிச்சைக் காக பெங்களூரு மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் பலியானவர்களில் பர்கூர் அடுத்த கொண்டப்பநா யனப்பள்ளியைச் சேர்ந்த கோவிந் தன்(39), ஓசூர் சாந்திநகரைச் சேர்ந்த உஷா நந்தினி(34), டி.கு ருபரஹள்ளியைச் சேர்ந்த பால் வியாபாரி ராமைய்யா(60), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக்(21), கிருஷ்ணகிரி குப்பச்சிப்பாறை மயிலா(35) ஆகியோரின் அடையாளம் தெரிந்தது. எஞ்சிய வர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக் குச் சென்ற ஆட்சியர் கதிரவன், ஏடிஎஸ்பி வீரராகவன், ஏஎஸ்பி ரோகிணி பிரியதர்ஷணி, வேப்பனப் பள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் முருகன், வட்டாட்சியர் முருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத் தில், மீட்புப் பணியை துரிதப்ப டுத்தினர்.
விபத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
தொடரும் கோர விபத்து
சூளகிரி அடுத்த மேலுமலையில் கடந்த ஜூன் 3-ம் தேதி தனியார் பேருந்தும், லாரியும் மோதிய கோர விபத்தில் 20 பேர் பலி யாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த கோர விபத்து நடந்து 51 நாட்கள் கடந்த நிலையில், மேலுமலை அருகே உள்ள சுண்டகிரியில் நேற்று நடந்த விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லாரி உதவியாளரால் விபரீதம்?
விபத்துக்குக் காரணமான கன்டெய்னர் லாரி எந்த சமிக்ஞையும் செய்யாமல் 6 வழிச் சாலையில் எதிர் முனையில் வந்து விபத்தை ஏற்படுத்தியதாகவும், லாரியை ஓட்டுநர் ஓட்டி வராமல், அவரது உதவியாளர் ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், லாரியில் உறங்கிக்கொண்டிருந்த ஓட்டுநரும் பலியானதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து சூளகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் -கிருஷ்ணகிரி ஒருவழிச் சாலையாக இருந்தபோதே இந்தப் பகுதியில் விபத்துகள் அதிகம் நடந்துள்ளன. 4 வழிச் சாலையாகவும், 6 வழிச் சாலையாகவும் மாற்றிய பின்னரும் விபத்துகள் குறையவில்லை. தொடர் விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படங்கள்: எஸ்.கே.ரமேஷ்.