மக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், யுகாதி பண்டிகை தினமான இன்று வங்கிகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யுகாதி பண் டிகையை முன்னிட்டு இன்று வங்கி களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த தலைவர் தாமஸ் பிராங்கோ கூறும்போது, ‘‘மக்கள் வரி செலுத்துவதற்கு வசதியாக அரசு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட சில வங்கிக் கிளைகள் வரும் 1-ம் தேதி வரை விடுமுறை நாட்களி லும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஆனால், தெலுங்கு மக்களின் முக்கிய பண்டிகையான யுகாதி பண்டிகையன்று வங்கி களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நாங்கள் ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளோம். அதன்படி, வங்கிகள் நாளை (இன்று) செயல்படாது’’ என்றார்.