தமிழகம்

சசிகலா - ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலை தடுக்க தலைமைச் செயலகத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு

செய்திப்பிரிவு

சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க தலைமைச் செயலகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் வரலாறு காணாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் நேற்று முன்தினம் இரவில் இருந்தே போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இறங்கினர்.

மெரினா கடற்கரை சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் ராஜாஜி சாலை 4 வழி களாக பிரிக்கப்பட்டன. இதில் பொதுமக்களின் வாகனங்கள் செல் வதற்கு இரண்டு வழிகளும், எம்எல் ஏக்களின் வாகனங்கள் செல்வதற்கு இரண்டு வழிகளும் ஒதுக்கப்பட்டன. நேற்று காலையில் தலைமைச் செயலகத்துக்கு சென்ற அனைத்து எம்எல்ஏக்களின் வாகனங்களும் சோதனையிடப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டன. காரில் எம்எல் ஏவையும், ஓட்டுநரையும் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

சட்டப்பேரவைக்குள், சட்டப் பேரவை காவலர்களின் எண் ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டிருந்தது. தலைமைச் செயலகத்துக்கு வெளியே கூடுதல் ஆணையர் தர் தலைமையிலும், வளாகத்துக்கு உள்ளே கூடுதல் ஆணையர் சங்கர் தலைமையிலும் மொத்தம் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்துக்கு வெளிப் புறத்தில் 5 வாசல்களும், கோட்டை வளாகத்தின் உள்பகுதியில் 5 வாசல்களும் என மொத்தம் 10 வாசல்கள் உள்ளன. அந்த 10 வாசல்களிலும் தடுப்புகள் அமைக் கப்பட்டு போலீஸார் நிறுத்தப்பட்டு, கடுமையான சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக் கப்பட்டனர். தலைமைச் செயலக ஊழியர்கள் உட்பட அடையாள அட்டை இல்லாத ஒருவரைக்கூட உள்ளே அனுமதிக்கவில்லை. இவ்வளவு கடுமையான பாது காப்பு போடப்பட்டிருப்பது தலைமைச் செயலக வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவைக்குள் எதிர்க் கட்சியினர் வெளியேற்றப்பட்டதும், மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அண்ணா சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகை யாளர்கள் 4-ம் எண் வாசல் அருகே குவிந்திருந்தனர். அப்போது அங்கு வந்த இணை ஆணையர் அன்பு, பத்திரிகையாளர்களை வேறு இடத்துக்கு செல்லும்படி கூறினார். இதனால் பத்திரிகை யாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அன்பு அங்கிருந்து சென்று விட்டார்.

SCROLL FOR NEXT