புதுக்கோட்டை மாவட்டம் கோட் டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள், பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 20) முதல் காலை வ ரையற்ற வேலைநிறுத்தப் போ ராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுகுறித்து, மீனவர்கள் சங்கத்தினர் கூறியதாவது: இலங் கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கடுமையாகத் தாக்கி, படகுகளை சேதப்ப டுத்துகின்றனர். மேலும், மீன வர்களைக் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வ தும் தொடர்கிறது. இதனால், தமிழக மீனவர்கள் வாழ்வாதா ரத்தை இழந்து தவிக்கின்றனர்.
எனவே, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை யும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கும் மானிய விலையிலான டீசலின் அளவை அதிகரிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வே லைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவே, மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற் ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.