தமிழகம்

பெரியாறு அணையில் மத்திய துணைக்குழு இன்று ஆய்வு

செய்திப்பிரிவு

முல்லை பெரியாறு அணையில் மத்திய துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

மூவர் குழு தலைவரால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழக, கேரள மாநில பிரதிநிதிகள் அடங்கிய மத்திய துணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் அம்பரீஷ் கரீஷ் கிரிஷ் உள்ளார். இந்த குழு 2 அல்லது 3 மாதத்துக்கு ஒருமுறை அணையில் ஆய்வு செய்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஆய்வு அறிக்கையை மூவர் குழு தலைவரிடம் அளித்து வருகிறது.

கடந்த மே 27-ம் தேதி துணைக் குழு அணையில் ஆய்வு மேற் கொண்டது. ஆனால் ஆலோசனைக் கூட்டம் நடத்தவில்லை. இந் நிலையில் ‘தி இந்து’விடம் பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அணையில் ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வருமாறும் தமிழக பிரதிநிதி களுக்கு மத்திய துணைக் குழு தலைவர் அலுவலகத்தில் இருந்து நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் திடீர் ஆய்வு என்று காரணம் சொல்லாமல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

          
SCROLL FOR NEXT