தமிழகம்

ஏடிஜிபியிடம் இந்திய தவ்ஹீத் ஜமாத் புகார்

செய்திப்பிரிவு

காவல் நிலையத்தில் இளைஞரை சுட்டுக் கொன்ற உதவி ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஏடிஜிபியிடம் இந்திய தவ்ஹீத் ஜமாத் மனு கொடுத்துள்ளது.

ராமநாதபுரத்தில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட செய்யது முகம்மது என்ற இளைஞர் உதவி ஆய்வாளரால் சுட்டும் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், பொதுச் செயலாளர் செய்யது இக்பால், மாநில செயலாளர் முகம்மது ஷிப்லி மற்றும் வடசென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் நேற்று பிற்பகல் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “செய்யது முகம்மதுவை சுட்டுக் கொன்ற உதவி ஆய்வாளர் காளிதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT