படகோட்டியும், மீன்பிடித் தொழிலாளியுமான கடிகை அருள்ராஜ் எழுதிய, ‘கடல் நீர் நடுவே’ நாவலின் இரண்டாம் பதிப்பு குளச்சல் கடல் நடுவே வெளியிடப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் வெளியிட, இலக்கியவாதி குளச்சல் மு.யூசூப் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி வரவேற்றார்.
திரைப்பட எழுத்தாளர் பாக்கியம் சங்கர், கடிகை அருள்ராஜ், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், அருட்பணி ஆண்டனி கிளாரட், திருத்தமிழ் தேவனார், பேராசிரியர் பா.வளன் அரசு, ஜஸ்டின் திவாகர், என்.டி.தினகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.