தமிழகம்

சட்டப்பேரவையில் 79 திமுக உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் 22-ம் தேதி விசாரணை

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 79 பேர் இடைநீக் கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 22-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

திமுக பொருளாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் உட்பட 79 திமுக உறுப் பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் கடந்த 17-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையில் பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவ ராக பணியாற்றி வருகிறேன். பணிகள் சுமுகமாக நடக்க ஆளும்கட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். ஆனால் எங்களை செயல்படவிடாமல் ஆளுங்கட்சியினர் தந்திரமாக செயல்படுகின்றனர்.

கடந்த 17-ம் தேதி நானும் எங்கள் கட்சி உறுப்பினர்களும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றோம். அப்போது ஆளுங் கட்சி உறுப்பினர் ஒருவர், நான் நடத்திய ‘நமக்கு நாமே’ பயணம் குறித்து சம்பந்தமில்லாத கருத்துகளை கூறினார். அதற்கு நான் தெரிவித்த பதில் கருத்து, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினர் தெரி வித்த கருத்து நீக்கப்படவில்லை.

இதற்கு நானும், எங்கள் கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித் தோம். சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தி, எங்கள் அனைவரையும் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதை யடுத்து என்னை சபைக் காவ லர்கள் குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியேற்றினர். எங்கள் கட்சியின் மற்ற உறுப்பினர்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். அன்றைய தினம் அவைக்கு வராத திமுக உறுப் பினர்களைக்கூட இடைநீக்கம் செய்துள்ளனர்.

முக்கிய விவாதங்களில் நாங்கள் பங்கேற்கக்கூடாது என்பதற்காக, நான் உள்ளிட்ட 79 திமுக உறுப்பினர்களை திட்டமிட்டு இடைநீக்கம் செய்துள்ளனர். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்து, சட்டப்பேர வைக் கூட்டத்தில் பங்கேற்க எங்களை அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரி யிருந்தார்

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் நேற்று காலை வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி, ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கை உடனே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்கு நீதிபதிகள், ‘‘இப் போது அவசர வழக்காக அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. மற்ற வழக்குகள் விசா ரணைக்கு வரும்போது அதனு டன் சேர்த்து திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்படும்’’ என்றனர்.

இன்னொரு எம்எல்ஏ மனு

இதேபோல, மதுரை மத்திய தொகுதி திமுக உறுப்பினர் பிடிஆர் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள நூலகத்தில் கடந்த 17-ம் தேதி புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். என்னையும் சேர்த்து இடைநீக்கம் செய்துள்ளனர். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியுள்ளார். இந்த 2 மனுக்களும் 22-ம் தேதி (திங்கள்கிழமை) விசாரணைக்கு வர உள்ளன.

SCROLL FOR NEXT