மேட்டூர், வடசென்னை உள்ளிட்ட நான்கு மின் நிலையங்களிலும் நெய்வேலியில் ஒரு மின் நிலை யத்திலும் சுமார் 1,680 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை தவிர மற்ற இடங்களில் ஒரு மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது.
தமிழக மின் வாரியம் மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான புதிய மின் நிலையங்களான மேட்டூர் இரண்டாம் நிலை, வடசென்னை இரண்டாம் நிலை, கூடங்குளம் மற்றும் வல்லூர் மின் நிலையங் களில் பணிகள் முடிந்து, மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
வல்லூரில் 2 அலகுகளில் ஆயிரம் மெகாவாட்டும், மேட்டூரில் 600 மெகாவாட்டும் வணிக ரீதியி லான உற்பத்தியைத் தொடங்கியுள் ளன. கூடங்குளம் அணு மின் நிலையம், வல்லூரில் மூன்றாம் அலகு, வடசென்னை புதிய நிலை யத்தின் 2 அலகுகள் உள்ளிட்ட வற்றில் சுமார் 2,000 மெகாவாட் சோதனை ஓட்டம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், மின் வெட்டே இல்லாமல் மின்சாரத் தேவை சமாளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வடசென்னை புதிய மின் நிலையத்தின் இரண்டா வது அலகு (600 மெகாவாட்), மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் அலகு (210 மெகாவாட்), மேட்டூர் புதிய மின் நிலையம் (600 மெகாவாட்), எண்ணூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் அலகு (60 மெகாவாட்) மற்றும் நெய்வேலி இரண்டாம் நிலையின் முதல் அலகு (210 மெகாவாட்) உள்ளிட்டவற்றில் மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை இரவு முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், 1,680 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட உற்பத்திக் குறைவு காரணமாக வெள்ளிக் கிழமை இரவிலும் சனிக்கிழமை பகலிலும் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேர மின் வெட்டை மின் வாரிய அதிகாரிகள் அமல்படுத் தினர். இதனால் பிளஸ் 2 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமப் பட்டனர்.
இதுகுறித்து, மின் துறை அதி காரிகள் ஆலோசனை நடத்தினர். தேர்வு நடக்கும் நேரத்தில் பகலிலும் இரவிலும் அதிக மின் தடை ஏற்படாமல் இருக்க, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்வெட்டு அதிகமாக இருந்ததால் பொதுத் தேர்வு மையங்கள் செயல் பட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு ஜெனரேட்டர் வசதி கொடுத்தது. இந்த ஆண்டு அப்படிச் செய்ய வில்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கும் நிலை யில், மாணவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின் தடையின்றி பார்த்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங் களில் தொழில்நுட்ப பிரச்சினை கள் ஏற்படாமல், முன் கூட்டியே கண்காணித்து, தொடர்ச்சியாக மின் நிலையங்களை இயக்க, தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அனல் மின் நிலைய பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் உற்பத்திக் குறைவு ஏற்பட்டால், பொது மக்களுக்கான மின் விநியோகத்தை நிறுத்தாமல், தொழிற்கூடங்களுக்கு மின் தடையை அமல்படுத்தி, நிலைமையை சமாளிக்குமாறு மின் விநியோக மைய அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.