தமிழகம்

ரூ.100 கோடியில் தொழில்நுட்ப மையம் அடிக்கல்: ஒரே மேடையில் முதல்வர், ஆளுநர், நாராயணசாமி

செய்திப்பிரிவு

புதுவை பிள்ளைசாவடியிலுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா வளா கத்தில் ரூ. 100 கோடியில் அமைக்கப் படவுள்ள தொழில்நுட்ப மையத் தின் அடிக்கல் நாட்டு விழா சனிக் கிழமை நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் கட்டாரியா மற்றும் மத்திய அமைச்சர் நாராயண சாமி கலந்துகொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் விழா வைப் புறக்கணித்து வந்த முதல்வர் ரங்கசாமி, யாரும் எதிர்பாராத வகை யில் விழா நடக்கும் இடத்துக்கு வந்தார்.

முதல்வர் வந்த சிறிது நேரத் துக்குப் பிறகு துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி, முனியப்பா ஆகியோர் வந்தனர். இதையடுத்து அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

முதல்வர் ரங்கசாமி பேசியதா வது:

புதுச்சேரியில் சலுகை இருந்த தால் இங்கு வந்த தொழிற்சாலை கள், சலுகைக் காலம் முடிந்த பிறகு வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றன. இதுதொடர் பாக மத்திய அரசிடம் பல முறை வலியுறுத்தினோம். ஆனால், ஏதும் கிடைக்கவில்லை. சிறிய மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து சலுகை தர வேண்டும். அப்போதுதான் தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:

மத்திய அரசுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை கிடையாது. புதிய பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்தால் நல்ல ஊதியத்தில் ஊதியம் கிடைக்கும். புதுச்சேரியில் குடிநீர் திட்டத்துக்காக ரூ. 300 கோடி கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.இதுதொடர்பாக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கமல்நாத்தைச் சந்தித்தேன். விரை வில் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைக்கும். திட்டத்தையோ, நிதியையோ முடக்கும் எண்ணம் இல்லை. புதுச்சேரி வளர்ச்சிக்கு முக்கியக்காரணம், மத்திய அரசு தொடர்ந்து நிதி அளிப்பதுதான் என்று தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மத்திய அமைச்சர் முனியப்பா பேசுகையில், “குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மூலம் 100 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை 2020-ம் ஆண்டுக்குள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். நாடு முழுவதும் ரூ. 2,200 கோடி திட்ட மதிப்பில் 15 புதிய தொழில்நுட்ப மையங்களை உலக வங்கி உதவியுடன் தொடங்க ஏற்பாடுகள் நடக்கிறது. நாராயணசாமியும், ரங்கசாமியும் இணைந்து செயல்பட்டால் புதுச்சேரிக்கு வளர்ச்சி உறுதி” என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸார் மோதல்

முன்னதாக விழா நடைபெற்ற பிள்ளைச்சாவடியில் காலாப்பேட் பகுதி காங்கிரஸார் பேனர் வைத்திருந்தனர். தாங்கள் பேனர் வைக்கும் இடத்தில் எவ்வாறு நீங்கள் பேனர் வைக்கலாம் என பிள்ளைச்சாவடி காங்கிரஸார் அந்த பேனரை கிழித்தனர்.

இதனால் இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபடத் தொடங்கி னர். போலீஸார் அவர்களை விலக்கி விட்டனர். அதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களைத் தள்ளிவிட காங்கிரஸார் முற்பட்டனர். விழா தொடங்கும் முன் அதிகளவில் காவல்துறை யினர் அவ்விடத்தில் குவிக்கப் பட்டனர்.

SCROLL FOR NEXT