தமிழகம்

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா ஐ.ஏ.எஸ், நியமித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாருக்கு பதிலாக சந்தீப் சக்சேனா இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் சக்சேனா தமிழக வேளாண் துறை முதன்மைச் செயலராக இருந்துவந்தார். இந்நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மோகன் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.

சந்தீப் சக்சேனா வகித்துவந்த வேளாண் துறை முதன்மைச் செயலர் பதவிக்கு வேறு யார் நியமிக்கப்படுவார் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT