நேபாள நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 10 பேரை ஹெலிகாப்டரில் அழைத்துவர தேவையான ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு வழங்கு மாறு தமிழக அரசு அதிகாரிக ளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 பேர் கொண்ட குழுவினர் கடந்த 20-ம் தேதி நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட கடும் மழை, நிலச்சரிவு காரண மாக அவர்களில் 10 பேர் தவித்து வருவதாக செய்தி வெளியானது.
நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு தமிழக அதிகாரிகள் விசாரித்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 10 பேரும் ஜாம்ஷாம் நகரில் பத்தி ரமாக உள்ளதாகவும், பருவநிலை சீரடைந்த பிறகு அவர்கள் அனைவரும் பொக்காரோ நகர் வழியாக காத்மாண்டு அழைத்து வரப்படுவார்கள் எனவும் தெரி வித்துள்ளனர். சென்னை அமைந் தகரையை சேர்ந்த ப.கணேஷ் என்பவர், தனது தந்தை மற்றும் உறவினர்கள் 10 பேர், நேபா ளத்தில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை காப்பாற்றுமாறும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பிரணவ் கணேஷ், தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தொடர் புகொண்டு, ‘ஜாம்ஷாம் நகரில் பருவநிலை சீராகவில்லை. எனவே, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 10 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பொக்காரோ நகருக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கிருந்து விமானம் மூலம் காத்மண்டுவுக்கு செல்ல முடியும். ஹெலிகாப்டர் பயணத்துக்கான ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படி, 10 தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவர, ரூ. 2 லட்சத்து 10 ஆயிரத்தை உடனடியாக இந்திய தூதரகத் துக்கு செலுத்துமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அனைவரையும் பத்தி ரமாக மீட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்து, சென்னைக்கு அழைத் துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் ளுமாறு அதிகாரிகளுக்கு முதல் வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.