தமிழகம்

ஸ்ரீசப்தகிரி பொறியியல் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

ஓச்சேரி ஸ்ரீ சப்தகிரி பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை டெக்ரூட் இணைந்து நடத்தும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம், கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது.

2014, 2015, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற பொறியியல், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ மாணவர்கள் இம்முகாமில் பங்கு கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர் www.ssitocheri.com என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. உடனடி பதிவும் கல்லூரி வளாகத்தில் செய்துகொள்ளலாம்.

தேர்வர்களை முன்னணி நிறுவனங்களுடன் இணைப்பது, தற்போது உள்ள பல்வேறு வகையான வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வையும் அதற்குத் தேவையான திறமை பற்றிய தகவல்களை அறிய உதவி செய்வது ஆகியவையே இம்முகாமின் நோக்கமாகும்.

பல்வேறு வகையான நிறுவனங்களில் உள்ள 1,500-க் கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதியுள்ளவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு வழங்கப்படும். வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

ஹெச்சிஎல் பிபிஓ, காக்னிசென்ட், ஹெச்ஜிஎஸ், சிஎஸ்எஸ் கார்ப்., ஆல்செக் டெக்னாலஜிஸ், மணப்புரம் ஃபைனான்ஸ், யுரேகா ஃபோர்ப்ஸ், ஐபி ரிங்ஸ், டேலன்ட்ப்ரோ, இக்யா குளோபல், டீம்லீஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்கின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT