சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை உதவி மையம் இன்று திறக்கப்படுகிறது.
சென்னை மண்டல சுங்கத்துறை சார்பில் சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் சுங்கத்துறை உதவி மையம் திறப்பு விழா இன்று காலை 11.30 மணிக்கு நடக்கிறது.
விழாவுக்கு சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் கே.சந்திரசேகர் தலைமை தாங்குகிறார். தலைமை சுங்கத்துறை ஆணையர் எஸ்.ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உதவி மையத்தை திறந்து வைக்கிறார்.
சுங்கவரி கட்டண விவரங்கள் குறித்து பயணிகள், பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக இந்த உதவி மையம் திறக்கப்படுகிறது.