தமிழகம்

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை: பேரவையில் கால்நடைத் துறை அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்து வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சட்டப்பேர வையில் அமைச்சர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பொங்கலின் போது கிராம மக்களிடையே நடத்தப் படும் பாரம்பரிய விளை யாட்டு நிகழ்ச்சி ஜல்லிக்கட்டு. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த விளையாட்டு கடந்த 2006-ம் ஆண்டு முதலே நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, எதிர்ப்பாக பல்வேறு காலங்களில் தனியார் மற்றும் பல அமைப்புகளின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொட ரப்பட்டன. பிராணிகள் நலவாரியம் கடந்த 2007-ல் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. தொடர்ந்து கடந்த 2014-ல் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டை தடை செய்து உத்தர விட்டது. இதை மறு பரிசீலனை செய்ய சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்து அது நிலுவையில் உள்ளது. காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க தமிழக அரசால் இடைவிடாத முயற்சிகள் கடந்த பல மாதங்களாக எடுக்கப்பட்டன.

காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க கடந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதன்பின் ஆகஸ்ட் 7-ம் தேதி பிரதமரை சந்தித்து அளித்த மனுவிலும் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்ய கோரியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த இந்தாண்டு ஜனவரி 7-ம் தேதி அனுமதியளித்தது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அப் போதே அவசர சட்டம் பிறப்பிக்க பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மேலும், மார்ச் 8-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி பொது எதிர்மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இம்மாதம் 30-ம் தேதி நடக்க உள்ளது.

தொடர்ந்து கடந்த ஜூன் 14-ம் தேதி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மனு அளித்தார். அதன்பின், 16-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றும்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT