மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு பரவலாக விட்டுவிட்டு மழை பெய்யும். தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் இலங்கைக்கு இடைப்பட்ட பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருப்பதால் மழை பெய்யும் சூழல் நிலவுகிறது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.