தேர்தல் அறிக்கையில் கூறியது போல ஒரு லிட்டர் பால் ரூ.25-க்கு விற்கவும், தனியார் பால் விலை உயர்வை திரும்பப் பெறச் செய் யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு லிட்டர் பால் ரூ.25-க்கு வழங்கப்படும் என்று உறுதி அளிக் கப்பட்டது. ஆனால், இப்போது ஆவின் பால் ரூ.24-ல் இருந்து ரூ.37 வரை விற்கப்படுகிறது. ‘ஹெரிட்டேஜ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு லிட்டர் பால் ரூ.46-க்கு விற்கப்படுகிறது. ஆகஸ்டு 1-ம் தேதி முதல் பால் விலை 2 ரூபாய் உயர்த்தப்படு வதாக அந்த நிறுவனம் அறி வித்திருப்பது அதிர்ச்சியளிக் கிறது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனை வருக்கும் இன்றியமையாத உணவாக பால் விளங்குகிறது.
இந்நிலையில், பால் விலை உயர்வால் காபி, டீ உட்பட பால் சார்ந்துள்ள அனைத்து பொருட்களின் விலையும் உயரும் நிலை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது பால் விலை, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தேமுதிக சார்பில் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது, மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறுவது ஒன்று. வெற்றி பெற்ற பிறகு அரசு நடந்துகொள்வது வேறொன் றாக இருக்கிறது. கடந்தமுறை நடந்த அதே நிகழ்வுகள் மீண்டும் நடக்கும் என்பதையே பால் விலை உயர்வு உணர்த்துகிறது.
எனவே, தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.25-க்கு வழங்க வும், தனியார் நிறுவன பால் விலை உயர்வை திரும்பப் பெறச் செய்யவும் அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். வாக்குறுதிகளை காப்பாற்றும் அரசாக இந்த அரசு செயல்பட வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.