விதிமுறைகளை மீறும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலு வலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் விதிகள்படி கேபிள் ஆபரேட்டர்களுக்கான விதிமுறைகள் பின்பற்றப்படு கிறதா? என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் அனுமதி பெறாமல் இயங்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டங் களில் கண்காணிப்பு குழு அமைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்காணிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு அச் சுறுத்தல் ஏற்படுத்தும் வகை யில் சில தொலைக்காட்சி களில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது கண்டறியப் பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் அனு மதி பெறாமல் பதிவிறக்கம் செய் யப்பட்டு ‘பீஸ் டிவி’ ஒளி பரப்பு செய்யப்படுவது தெரியவந் துள்ளது. மொத்தம் 892 தனியார் தொலைக்காட்சிகள் மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளன. எனவே, மத்திய அரசின் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச் சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.