தமிழகம்

நல்லகண்ணு பிறந்த நாள்: ஜெயலலிதா வாழ்த்து

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு, முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்.நல்லக்கண்ணுவின் 89-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்து கடிதத்தில், "தாங்கள் 89-வது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 89-வது பிறந்த நாள் காணும் தங்களுக்கு என்னுடைய உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மன உறுதியுடனும், நீடூழி வாழ்ந்து, தாங்கள் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பொது வாழ்வில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் நாட்டு மக்களுக்கும் சிறந்த தொண்டினை ஆற்றிட இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT