நூலக வசதி இல்லாத 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில், நூலக வசதியை இலவசமாக அமைத்துக் கொடுத்ததோடு, இதுவரை லட்சக் கணக்கான நூல்களையும் வழங்கி வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.
கருங்கல் அருகே வடக்கன்கரையைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். ஓய்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான இவர், 1988-ம் ஆண்டு நூலக அருட்பணி இயக்கம் என்னும் அமைப்பை தொடங்கினார். அதன் மூலம் இது வரை 153 இலவச நூலகங்களைத் திறந்துள்ளார்.
இதுகுறித்து 'தி இந்து'விடம் சுந்தர்ராஜ் கூறியதாவது: நான் 5-ம் வகுப்பு படித்தபோது, எங்கள் பகுதியில் முதல் எம்.எட். பட்டதாரி என் சித்தப்பா ஆப்ரகாம். இங்கு இலவச வாசிப்பு சாலை யைத் தொடங்கினார். அதைப் பராமரிப்பு செய்யும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அப்படி வாசிக்கத் தொடங்கிய பழக்கம், ஒரு கட்டத்தில் வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமே ஒரு மனிதனை பண்படுத்திவிட முடியாது. அதைத் தாண்டிய வாசிப்பே பக்குவப்படுத் தும் என்ற புரிதலை உருவாக்கியது.
அடிகளாரின் உரை
குன்றக்குடி அடிகளார் எழுதிய 'ஆலயங்கள் சமுதாய மையங்கள்' என்ற சென்னை வானொலி நிலைய உரைத் தொகுப்பு நூலை வாசித்தேன். பழங்காலத்தில் தமிழகத்தில் ஆலயங்கள் ஆற்றிய 13 திருப்பணிகளில் ஒன்று நூலகப் பணி என அவர் விளக்கி இருந்தார். 1987-ல் குமரி மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்று வந்தேன். குன் றக்குடி அடிகளாரின் வார்த்தையை அடியொற்றி, நூலகம் அமைக்கக் கோரி கிறிஸ்தவ தேவாலயங்களி டம் அணுகினேன். 1988-ம் ஆண்டு தொடங்கிய இப்பயணம் இப்போது 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூலகங்களை அமைத்துள்ளேன். கேரள எல்லையோரப் பகுதியில் உள்ள கிராமங்களில் 28 மலையாள நூலகங்களும் அமைத்துள்ளோம்.
இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான நூல்களை, இந்த நூல கங்களுக்கு வழங்கியுள்ளோம். நூலகங்களின் வேகமான பெருக் கத்துக்கு கிறிஸ்தவ தேவாலயங் களின் ஒத்துழைப்பும் காரணம். என் வீட்டு மாடியிலும் நூலகம் அமைத்துள்ளேன். இந்த இயக்கத் தின் மூலம் பள்ளிகளில் வாசிப்புப் பழக்கத்தையும் ஊக்கப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு சுந்தர்ராஜ் கூறினார்.