தமிழகம்

அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு: ஜூலை 19-ம் முதல் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு கலந் தாய்வுக்கு ஜூலை 19-ம் முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் விடுத்துள்ள செய் திக்குறிப்பு:

2016-17-ம் கல்வி ஆண்டில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு இணைய தளத்தின் வாயிலாக நடைபெற உள்ளது. ஜூலை 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆக. 6-ல் தொடக்கம்

கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும். இதன்படி, அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும்.

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர் கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட் டத்துக்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) ஆகஸ்ட் 13-ம் தேதியும் நடைபெறும்.

முதுகலை ஆசிரியர்கள்

அரசு, நகராட்சி மேல்நி லைப் பள்ளி முதுகலை ஆசி ரியர்கள் மாறுதல் (மாவட்டத் துக்குள் மாறுதல்) ஆகஸ்ட் 20-ம் தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முது கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஆகஸ்ட் 21-ம் தேதியும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக் கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ம் தேதியும் நடை பெறும்.

உடற்கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை, ஆசிரி யர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்) ஆகஸ்ட் 23-ம் தேதியும், உடற் கல்வி ஆசிரியர்கள், தையல், இசை, கலை, ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மா வட்டம் விட்டு மாறுதல்) ஆகஸ்ட் 24-ம் தேதியும், பட்டதாரி ஆசி ரியர்கள் பணி நிரவல் ஆகஸ்ட் 27, 28 மற்றும் 29-ம் தேதிகளிலும் நடைபெறும்.

தொடக்கப் பள்ளி

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந் தாய்வு குறித்து, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியர் மாறுதலுக்கான விண்ணப்பங்களை உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஜூலை 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு (இணையதளம் வாயிலாக) ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும். நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு (இணையதளம் வாயிலாக) ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும்.

நடுநிலைப் பள்ளித் தலைமை யாசிரியர்களுக்கான பொதுமா றுதல் கலந்தாய்வு, நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியருக் கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும்.

தலைமை ஆசிரியர்கள்

தொடக்கப் பள்ளி தலை மையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதியும், இடைநிலை ஆசிரியர் களுக்கான பணிநிரவல் கலந் தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதியும் நடைபெறும். இடைநிலை ஆசி ரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத் துக்குள்), மாவட்டத்துக் குள் (ஒன்றியம் விட்டு ஒன் றியம்) ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும்.

பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம் ), ஆகஸ்ட் 20-ம் தேதியும், இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT