தமிழகம்

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.74 கோடி மோசடி: எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து கைது

செய்திப்பிரிவு

மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக ரூ.74 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வேந்தர் மூவிஸ் பட அதிபர் மதன். இவர் கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாய மானார். கடிதத்தில் "கங்கை சென்று ஜீவ சமாதி அடையப் போகிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையில், மருத்துவக் கல்லூரி சீட்டுக்காக மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் 111 பேர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அதில், தங்களிடம் ரூ.74 கோடி மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து மதனின் தாயார் தங்கம் பத்திரிகையாளர் களை சந்தித்து, "மதன் பெற்ற பணம் அனைத்தையும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து விடம் கொடுத்துவிட்டார்" என்றார்.

இதற்கிடையில் மருத்துவக் கல்லூரி சீட்டுக்காக பணம் கொடுத்த வர்கள் பச்சமுத்து வீட்டை முற்றுகையிட்டு பணத்தை திரும்பத் தரும்படி கோஷமிட்டனர்.

சில தினங்களில் மதன் மாயமானது குறித்து அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், மதன் மாயமான விவகாரத்தில் பச்சமுத்துவுக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு இருந் தார்.

இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவ தாக எழுந்த மோசடி புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர். விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் மருத்துவக் கல்லூரி சீட்டு மோசடி தொடர்பாக மதனின் நண்பர் விஜயபாண்டியனை கைது செய்தார். தொடர்ந்து பச்சமுத்து வின் ஐஜேகே (இந்திய ஜனநாயக கட்சி) நிர்வாகிகள் பார்கவன் பச்சமுத்து, சீனிவாசன், சண்முகம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பச்சமுத்து மீது ஏமாற்றுதல் (ஐபிசி 420), நம்பிக்கை மோசடி (406), உள்நோக்கம் (சதி) (34) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

ஆனால், மாயமான மதனை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வழக்கை வேறு புலன் விசாரணை அமைப் பிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை வரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பச்சமுத்து விடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி அவரிடம் நேற்று முன்தினம் மாலை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

நள்ளிரவும் விசாரணை நடந்தது. மீண்டும் நேற்று காலை விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக எழுந்த குற்றச்சாட்டில் போலீஸார் பச்சமுத்துவை நேற்று மதியம் கைது செய்தனர். பின்னர், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க முடிவு செய்தனர். ஆனால், அவர், தனக்கு நெஞ்சு வலிப்பதாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பச்சமுத்துவை போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கைது குறித்து பச்சமுத்து தரப்பு வழக்கறிஞர் வெங்கடேசன் கூறும்போது, "பச்சமுத்து மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரது நற்பெயரை கெடுக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. அவர் குற்றவாளி இல்லை என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்போம்" என்றார்.

மதனின் தாயார் தரப்பினர் கூறும்போது, "பச்சமுத்துவின் கருவியாகத்தான் மதன் செயல் பட்டார். எனவே, பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கைதான்" என்றனர். இதனி டையே பச்சமுத்து நேற்று இரவு நீதிபதி பிரகாஷ் முன்பு ஆஜர்படுத் தப்பட்டார்.

SCROLL FOR NEXT