ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் முழுமையாக தோற்றுவிட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூரைப் போன்று, தற்போது ஆர்.கே.நகரி லும் வாக்காளர்களுக்கு வேட்பாளர் கள் பணம் கொடுத்த புகார் காரண மாக தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது எனில், விஜயபாஸ்கர் உட்பட சம்பந்தப்பட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணம் விநியோகித்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பணத்தால் வெற்றி பெற முயற்சித்த கட்சிகளுக்கு இடையே நாங்கள் கொள்கையை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து பல லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும்.
ஆர்.கே.நகரில் ரூ.84 கோடி வரை பணப் பட்டுவாடா நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பண மதிப்பு நீக்கத்தால் கறுப்பு பணம் ஒழியவில்லை என்பதற்கு ஆர்.கே.நகரில் நடந்த பணப் பட்டுவாடாவே உதாரணம்.
இந்திய கம்யூ. மாநில செய லாளர் இரா.முத்தரசன்:
ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடாவை காரணமாகக் கூறி, தேர்தலை ரத்து செய்திருப்பது ஏற்புடையதல்ல. மீண்டும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும்போது, பணப் பட்டுவாடா இல்லாமல் தேர்தல் நடத்த முடியும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தால் எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஐனநாயகத்தைச் சீரழிக்கக் கூடியது. பாஜகவின் துணையுடன் ஐனநாயகப் படுகொலையை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.