தமிழகம்

கல்லூரி மாணவியை வெட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை பிளேடால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப் பட்டார்.

சென்னை பழைய வண்ணா ரப்பேட்டை போஜராஜ நகரில் வசிப்பவர் வினோத்குமார். ஷேர் ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை வினோத் குமார் ஒருதலையாக காதலித்துள்ளார். மாணவியிடம் காதலை தெரிவித்த போது, அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தி னம் மாலை கல்லூரியில் இருந்து வீட்டுக்கு மாணவி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த வினோத்கு மார், தன்னை காதலிக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார். அவரை கல்லூரி மாணவி கண்டிக்கவே, ஆத்திரம் அடைந்த வினோத்குமார் பிளேடால் மாணவியின் கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த மாணவியை அருகே இருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர்.

இதுகுறித்து வண்ணாரப் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீஞ்சூரில் பதுங்கி இருந்த வினோத்குமாரை நேற்று காலையில் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT