தமிழகம்

ஆலந்தூர் - பரங்கிமலை இடையே ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நள்ளிரவில் ஆய்வு: 5 நாளில் மெட்ரோ ரயில் ஓடும்

செய்திப்பிரிவு

ஆலந்தூர் பரங்கிமலை இடையே நேற்று நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாயக் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அடுத்த 3 நாட் களில் இந்த வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப் படவுள்ளன.

சின்னமலை விமான நிலை யம் இடையே நேற்று மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெய லலிதா தொடங்கும்போது பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலையத் தையும் திறந்து வைத்தார். ஆனால், அந்த தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை.

இதற்கிடையே, நேற்று இரவு வந்திருந்த ரயில்வே பாது காப்பு ஆணையர் நாயக் தலை மையிலான குழு நள்ளிரவில் ஆய்வு நடத்தியுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ஆலந்தூர் - பரங்கிமலை இடையே சுமார் 2 கி.மீ தூரத்துக்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தினார். அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்புதல் பெறப்படும். பின்னர், அடுத்த 3 நாட்களில் அதாவது, இன்னும் 5 நாட்களில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு, தனியாக தொடக்க விழா எதுவும் இல்லை.

பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்துடன் மெட்ரோ ரயில் நிலையம் இணைந்தால், மக்களின் பயணம் எளிதாக இருக்கும். அதிகளவில் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT