தமிழகம்

இன்று ஈஸ்டர் திருநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

இன்று ஈஸ்டர் திருநாள் கொண்டாடப் படுவதை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

இயேசு இன்னல்களிலிருந்து மீண்டெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

அன்பின் திருவுருவமான இயேசு உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளை கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

துயரங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபட்டு தமிழக மக்கள் மகிழ்வுடன் வாழும் நிலை உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கிறிஸ்துவ பெருமக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தமிழகம் வளர்ச்சியும், வளமும் அடைய வேண்டுமானால் உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு உயிரூட்டப்பட வேண்டும். அதற்காக இயேசு உயிர்தெழுந்த இந்த புனித நாளில் அனைத்து தரப்பு மக்களும் உறுதியேற்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்துவ மக்கள் வாழ்வில் வரும் காலம் வசந்த காலமாக அமைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,சமக தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT