தமிழகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறண்ட நீர்நிலைகள்: தண்ணீரை தேடி அலையும் கால்நடைகள்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டதால் கால்நடைகள் தண்ணீரின்றி தவிக்கின்றன. தினமும் தண்ணீரைத் தேடி பல கி.மீ. தூரம் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பருவ மழை பொய்த்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. தற்போது கோடை மழையும் பெய்யாததால் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மாவட்டத்தில் 86,000 பசு, காளை உள்ளிட்ட மாடுகளும், 1.3 லட்சம் வெள்ளாடுகளும் வளர்க்கப் படுகின்றன. ஒன்று, இரண்டு மாடு அல்லது ஆடுகள் வளர்ப்போர் வீடுகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி வைத்தோ, நிலத்தடி நீரை பயன்படுத்தியோ கால்நடைகளை காப்பாற்றுகின்றனர். ஆனால் மாடு, ஆட்டு மந்தை வளர்ப்போரின் நிலைமை மோசமாக உள்ளது. பசும் புல் இல்லாமல், கருகிக்கிடக்கும் புற்களை மேயும் மாடுகள் தண்ணீரைத் தேடி அலைகின்றன.

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கண்மாயில் வறட்சி காலத்திலும் சிறிதளவாவது நீர்தேங்கிக் கிடக்கும். ஆனால், இந்தாண்டு இக்கண்மாயும் முற்றிலும் வறண்டுவிட்டது. தற்போது, கண்மாயில் கீழக்கரை சாலையோரம் ஒரு பள்ளத்தில் காவிரிக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை ஆர்.எஸ்.மடை, அம்மன்கோயில், பால்கரை, அச்சடிப்பிரம்பு, புத்தேந்தல், கூரியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கால்நடைகளுக்கு பயன் படுத்துகின்றனர். கால்நடை களை மேய்த்துவிட்டு, பிற்பகல் நேரங்களில் சக்கரக்கோட்டை கண்மாயில் நீர் அருந்த வைக் கின்றனர். பால்கரை உள்ளிட்ட சில கிராம மக்கள் 5 கி.மீ. தூரம் கடந்து கால்நடைகளை இங்கு அழைத்து வருகின்றனர். .

இதுகுறித்து பால்கரையைச் சேர்ந்த பஞ்சவர்ணம்(60) கூறிய தாவது: 150-க்கும் மேற்பட்ட நாட்டு பசு, காளை மாடுகள், கன்றுக்குட்டி களை வளர்த்து வருகிறேன். அதேபோல், எங்கள் ஊரைச் சேர்ந்த கணபதி(65) என்பவரும் 150-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். மாடுகளை மேய்த்துவிட்டு, இரவில் காட்டுப் பகுதியில் மாடுகளை அடைய வைக்கிறோம். 5 கி.மீ. தூரம் சென்று சக்கரக் கோட்டை கண்மாயில் நீர் அருந்த வைத்து கால்நடைகளை காப்பாற்றி வருகிறோம். தொடர்ந்து வறட்சி நீடித்தால், கால்நடைகள் தண்ணீரின்றி மடியும் நிலை ஏற்படும் என்றார்.

ஆர்.எஸ்.மடை விவசாயி தங்கராஜ் கூறியது: நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்க்கிறேன். எங்கள் ஊரில் ஒரு குடம் தண்ணீர் ரூ. 5-க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால், இவ்வளவு ஆடுகளுக்கு தண்ணீர் விலைக்கு வாங்க முடி யாது. அதனால் கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீருக்காக 1 கி.மீ. தூரம் வந்து ஆடுகளை நீர் அருந்த வைத்துச் செல்கிறேன். அரசு கண்மாய், வயல்வெளி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து நீர்தேக்கத் தொட்டி கட்டி அதில் நீர் நிரப்பி வைத்தால் கால்நடைகளை காப்பாற்றலாம் என்றார்.

கால்நடை பராமரிப்புத்துறை ராமநாதபுரம் மாவட்ட இணை இயக்குநர் டி.மோகன் கூறும்போது, “கடும் வறட்சியால் விவசாயம் இல்லாமல் போனதால் கால்நடை களுக்கு தீவனம் இல்லை. மேய்ச்சல் நிலங்களும் வறண்டு கிடக்கின்றன. அதனால் அரசு மூலம் ஒரு கிலோ வைக்கோல் ரூ.2 மானியத்தில் வழங்குகிறோம். இதுவரை மாவட்டத்தில் 7 வைக்கோல் விற் பனை கிடங்கு மூலம் 600 டன் வைக்கோல் விவசாயிகளுக்கு வழங் கப்பட்டுள்ளது. கால்நடை மருந்தகங்களுக்கு சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்காக அங் குள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கிறோம். மேய்ச்சல் பகுதிகளில் தண்ணீர் வைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்றார்.

SCROLL FOR NEXT