அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் கட்சிப் பதவிகளையும், ஆட்சிப் பதவிகளையும் "இரு ஊழல் அணிகளையும்" இணைப்பதற்காக ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசை கண்டிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல், உட்கட்சி பிரச்சனையில் முதலமைச்சரும், அமைச்சர்களும் மூழ்கியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘’ தமிழக அரசில் உள்ள 64 துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள். "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அழைத்துப் பேசவில்லை என்றால் காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்போம்” என்று அரசுக்கு நோட்டீஸ் அளித்தும், அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் கட்சிப் பதவிகளையும், ஆட்சிப் பதவிகளையும் "இரு ஊழல் அணிகளையும்" இணைப்பதற்காக ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அதிமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்தால் அரசு சேவைகள் முடங்கி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை விரைவாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.