தமிழகம்

‘தி இந்து’ எஸ்.எம்.சில்க்ஸ் இணைந்து நடத்திய கொலு செல்ஃபி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

ம.சுசித்ரா

‘தி இந்து’ வாசகர்களுக்காக நடத்தப்பட்ட கொலு செல்ஃபி போட்டியில் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 பேருக்கு சென்னை மயிலாப்பூர் எஸ்.எம்.சில்க்ஸ் வணிக வளாகத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன.

நவராத்திரியை முன்னிட்டு வாசகிகளுக்கான கொலு போட்டியை ‘தி இந்து’ அறிவித்தி ருந்தது. ‘‘உங்கள் வீட்டு கொலுவை செல்ஃபியாக படம் பிடித்து ‘தி இந்து’ மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்’’ என்று அறிவித்ததும், சில மணித் துளிகளில் மளமளவென வந்து குவிந்தன 200-க்கும் அதிகமான கொலு புகைப்படங்கள். பெண்க ளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படும் கொலுவை மையமாகக் கொண்ட போட்டியில் ஆண்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.

கொலு அலங்கரிப்பின் விதம், பொம்மை தயாரிப்பு மற்றும் அலங்கரிப்பில் கையாண்ட முறை, முன்வைத்த கருத்து ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, மொத்த போட்டியாளர்களில் இருந்து 27 பேர் தேர்வு செய்யப்பட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட் டனர்.

இந்த போட்டியை ‘தி இந்து’ நாளிதழோடு இணைந்து எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனமும் நடத்தி யதையடுத்து, பரிசளிப்பு விழா அவர்களது வணிக வளாகத்தில் நடத்தப்பட்டது. ‘தி இந்து’ நாளிதழின் வர்த்தகத் தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனத் தலைவர் மனோஹரின் மகன் ஞானமூர்த்தி ஆகியோர் விழாவில் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி னர்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் எஸ்.எம்.சில்க்ஸின் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் மட்டுமின்றி ஸ்பிரிங் மெட் ஸ்பா, ஆல்ஃபா மைண்ட் பவர், நவ்யா, விஜயா ஆப்டிகல் ஹவுஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கிய பல்வேறு பரிசு கூப்பன்கள் அளிக்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள் கூறும்போது, ‘‘நாங்கள் ‘தி இந்து’ படிப்பதை பெருமையாகக் கருதுகிறோம். ‘தி இந்து’ நடத்தும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதை மிக உயர்ந்த சாதனையாகக் கருதி கொண்டாடுகிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT