தமிழகம்

கிருஷ்ணகிரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் குழு நேரில் ஆறுதல்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் பாலகிருஷ்ண ரெட்டி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் காயமடைந்த 30 பேருக்கும் தலா ரூ.50,000 வீதம் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்கள். அதேபோல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விபத்தில் பலியானவர்களில் 3 பேரது சடலம் மட்டும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. விபத்து குறித்து தகவலறிய 1299 என்ற ஹெல்ப்லைனை பயன்படுத்தலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT